நம் படத்தை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் அனிமேஷன் படமாக(.gif) மாற்ற?

ஒருபடம் சாதரணமாக பார்பதற்கும் சற்று அனிமேஷன் சேர்த்து பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது போல் அனிமேஷன்  படம் உருவாக்குவதற்கு நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில்  பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நாம்  உபயோக படுத்தமுடியும். அல்லது அந்த தளங்களில் படங்களை உருவாக்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
கூகுளில் எதையோ தேடிகொண்டிருக்கும் போது கிடைத்தது இந்த தளம். இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை.இந்த தளத்தில் குழந்தைகள் கூட படங்களை உருவாக்கும் அளவிற்கு சுலபமாக வடிவைதுள்ளனர்.  இந்த தளம் பல எண்ணற்ற வித்தியாசமான டிசைன்கள் கொண்டுள்ளது. இந்த தளம் மூலம் நான் உருவாக்கிய படங்கள் சில
கீழே கொடுத்துள்ளேன்.
Loogix.com. Animated avatars. Rotation


Loogix.com. Animated avatars. GuggleLoogix.com. Online Photo Frames

Loogix.com. Animated avatars. RadialBlur
மேலே உள்ளதை போல உங்கள் படத்தையும் உருவாக்க இங்கு  கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்  


           இந்த விண்டோவில் நான் நீல நிறத்தில் காட்டியிருக்கும் Choose File என்ற கிளிக் செய்து உங்கள் போட்டோவினை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின்பு அதற்கு கீழே size என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான அளவினை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
      அடுத்து நான் பச்சை நிறத்தில் வட்டமிட்டு காட்டியிருக்கும் Select Effect என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான effect தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
      முடிவில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியிருக்கும் Generate Animation என்ற இடத்தில் கிளிக் செய்து விடவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.
அவ்வளவு தான் உங்கள் படத்தில் அனிமேஷன் எபெக்ட் வந்திருக்கும். இப்பொழுது Save to Disk  என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யுட்டரில் சேமித்து கொள்ளலாம். அல்லது html code காப்பி செய்து நம் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளலாம். அல்லது அந்த Url காப்பி செய்து பயன் படுத்தி கொள்ளலாம்.  

Comments