பிளாக்கரில் நமக்கு தேவையான வடிவில் UPLOAD செய்யும் படத்தினை மாற்ற ?

நாமும் தினமும் பதிவை எழுதிக்கொண்டு தான் இருக்கிறோம். நம்மால் முடிந்தவரை  தெரிந்ததை மற்றவர்களுக்கு கூறிக்கொண்டு இருக்கிறோம். இன்று நாம் பார்க்க போகின்ற பதிவு பதிவர்களுக்கானது . நாம் பதிவு எழுதும் பொழுது பதிவு மற்றவர்களுக்கு புரியவைப்பதற்காக சில தொடர்பான படங்களை சேர்ப்போம். அப்படி சேர்க்கும் படம் நாம் எவ்வளவு பெரிய படத்தை சேர்த்தாலும் BLOGGER.COM அதனுடைய DEFAULT (S320) அளவுகளிலேயே நம்முடைய படம் பிளாக்கரில் தெரியும். அப்படி தெரியும் போது மிகவும் நுணுக்கமான பகுதிகள் சரியாக தெரியாது. அந்த குறையை போக்க தான் இந்த பதிவு
UPLOAD செய்தவுடன் DEFAULT ஆக வந்த படம் கீழே 

மாற்றம் செய்தவுடன் வந்த படம் கீழே 


என்ன மேஜிக் போன்று உள்ளது என்று நினைக்க வேண்டாம் இதை கொண்டு வர உங்களுக்கு  எந்த SOFTWARE, HTMLCODE -எதையும் சேர்க்க தேவையில்லை நான் சொல்வதை பின்பற்றினாலே போதும். இதை நம் பதிவில் கொண்டு வர முதலில் நீங்கள் பதிவு எழுதும் பொழுது நீங்கள் சேர்க்க விரும்பும் படத்தினை UPLOAD செய்தவுடன்  அதே பக்கத்தில் உள்ள EDIT HTML என்ற பட்டனை அழுத்தவும். அழுத்தியவுடன் உங்களுக்கு கீழ்க்கண்ட வாறு விண்டோ ஓபன் ஆகும்
இந்த படத்தில் நான் நீல நிறத்தில் காட்டியிருக்கும் (S320) நாம் சேர்த்த படத்தின் DEFAULT அளவு ஆகும். இதை நமக்கு தகுந்தவாறு மாற்றி (S400,S800) போன்ற அளவுகளை கொடுத்து விட்டு திரும்பவும் COMPOSE என்ற பட்டனை அழுத்தவும். என்ன இப்பொழுது உங்கள் படம் பெரியதாக மாறி இருப்பதை காண்பீர்கள்.
நீங்கள் படத்தை பெரியதாக்க கொடுக்க வேண்டிய அளவுகள் (S400,S640,S800) இதில் எந்த அளவு உங்கள் பிளாக்கிற்கு பொருந்துமோ அந்த அளவில் பெரியதாக ஆக்கலாம்.

நீங்கள் படத்தை சிறியதாக்க (S160)    அவ்வளவு தான் உங்கள் படம் நீங்கள் நினைத்த வடிவில் மாறியிருக்கும். 
(குறிப்பு: இதன் மூலம் நாம் பெரியதாக்கும் படத்தின் தரம் குறைவதில்லை ) 

Comments