Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கர் டிராப்டில் மிகவும் பயனுள்ள சூப்பர் வசதி

யாத்திரை நல்ல படியாக முடிந்தது. திரும்பவும் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.


பிளாக்கர் உபயோகிக்கும் அனைவருக்கும் பிளாக்கர் டிராப்ட் பற்றி தெரிந்திருக்கும். பிளாக்கர் டிராப்ட் என்பது பிளாக்கரின் புதிய வசதிகளை சோதனை செய்து வாசகர்களிடம் வரவேற்ப்பை பெற்றால் மட்டுமே  இந்த வசதியை  நம் பிளாக்கர் தளத்தில் இந்த வசதியை சேர்ப்பார்கள். இது போன்று சோதனை முயற்சி செய்யவே இந்த தளம் உபயோகிக்க படுகிறது. இந்த வரிசையில் மிகவும் பயனுள்ள வசதியை நம் பிளாக்கர் தளம் சோதனை முயற்சியாக டிராப்ட் தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அந்த வசதி என்பது Mobile Template என்ற வசதியாகும். 
  • இந்த வசதியானது நம்முடைய பிளாக்கின் டெம்ப்ளேட் வடிவத்தை அப்படியே மொபைல் போனில் காண்பதற்கு இணங்க தானாகவே மாற்றி கொள்கிறது. ஆதலால் மொபைல் போனில் நம் தளத்தை கானபர்வர்களுக்கு ஏற்ப்படும் Alligment பிரச்சினைகள் முற்றிலும் நீங்கு கிறது.
  • இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் மொபைல் போனில் நம்முடைய பிளாக்கில் உள்ள விட்ஜெட்டுக்கள் எதுவும் தெரியாது.
  • பதிவுகள் மட்டுமே தெரியும். இதனால் நம் பிளாக் லோடு ஆகு நேரம் மிகவும் குறையும். இதன் மூலம் வாசகர்கள் நம் தளத்தை விரும்பி படிப்பார்கள்.
உபயோகிக்கும் முறை:
  • முதலில் இந்த லிங்கில் சென்று உங்கள் Blogger Draft தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • வந்திருக்கும் உங்கள் டாஸ்போர்டில் Settings க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து வரும் விண்டோவில் Email&Mobile என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து show mobile template என்ற பகுதியில் yes என்பதை க்ளிக் செய்து விடவும். தேவைபட்டால் MOBILE PREVIEW என்ற பட்டனை அழுத்தி உங்கள் டெம்ப்ளேட்டின் மாதிரியை பார்க்கலாம். 
  • அடுத்து கீழே உள்ள SAVE SETTINGS என்பதை க்ளிக் செய்து விடவும்.
  • அவ்வளவு தான் இனி உங்கள் பிளாக்கை மொபைல் போனில் காண்பவர்களுக்கு எளிதாத உங்கள் பிளாக்கை திறந்து கொள்ள முடியும்.
இன்றைய பயனுள்ள குரோம் நீட்சி 
கூகுளில் மிகவும் பயனுள்ள வசதிகளில் ஒன்று கூகுள் மேப் வசதி. இந்த வசதியின் மூலம் நமக்கு தேவையான இடத்தை பற்றி நொடிபொழுதில் அறிந்து கொள்ளலாம். இருந்தாலும் இதனை கண்டறிய நாம் கூகுள் மேப் தளத்திற்கு சென்று தான் பார்க்க வேண்டும். ஆனால் இனி அவை தேவையில்லை இந்த நீட்சியை நிறுவினால் நம்தளத்தில் இருந்தும் தேவையான இடங்களை பார்த்து கொள்ளலாம்.


டுடே லொள்ளு 
லேட்டா வந்தாலும் வெயிட்டா வந்து இருக்கேன் வாருங்கோ 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

18 comments :

  1. வருக, வருக. தங்களின் சேவையை தொடர்க.

    ReplyDelete
  2. எனது பகுதியில் show mobile template என்பதே இல்லை. வேறு வேறு optionகள் தான் உள்ளது.

    ReplyDelete
  3. யாத்திரை நல்ல படியாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே,

    வழக்கம்போலவே புதிய தகவலை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் அருமை

    தொடர்ந்து கலக்குங்க..........

    ReplyDelete
  4. எல்லோருக்க்கும் பயனுள்ள பதிவி.

    என் பதிவுகள் மறந்துவிட்டதா?
    என் பிலாக் அட்ரஸ் இப்ப http://samaiayalattakaasam.blogspot.com
    இப்படி மாற்றீ உள்ளேன்., முடிந்த போது வந்து கருத்திடவும்.
    ஜலீலா

    ReplyDelete
  5. @தமிழ் உதயம்

    நண்பரே தாங்கள் www.draft.blogger.com தளத்தில் தான் சென்றீர்களா என உறுதி படுத்தவும்.

    ReplyDelete
  6. என்ன சசி கொஞ்ச நாலா எங்க ஆளையே காணோம்?
    பதிவுக்கு,பகிர்வுக்கு நன்றி,

    ReplyDelete
  7. பயனுள்ள பகிர்வு..

    ReplyDelete
  8. கிருஸ்மஸ் தாத்தா எந்த கிப்ட்டும் கொடுக்கலையே :(

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு .
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  10. நல்ல முறையில் பயணம் முடித்துக்கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள்...!!!

    நல்ல தகவல்... நானும் பயன் பெற்றேன்

    மிக்க நன்றி

    ReplyDelete
  11. அருமையான தகவல் நண்பரே ....

    ReplyDelete
  12. நல்வரவு,பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. நல்ல உபயோகமுள்ள பதிவு ... நன்றி சசி

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவு
    நன்றி

    ReplyDelete
  15. பயனுள்ள தகவல் சசி.. என் மாணவர்களுக்கு என் பிளாக்கின் வழி சொல்லும் அத்துனைத் தகவல்களும் அலிபேசி கொண்டே சிரமம் இன்றி படிக்க இயலும்.. நன்றி.. நல்லத் தகவலுக்கு...

    ReplyDelete
  16. நண்பரே இந்த வசதி ப்ளாகரில் உள்ள பலகைகளை உபயோகித்தால் மட்டுமே தொலைபேசியில் அழகாக வரும் மற்ற மூன்றாவது மனிதர்களின் பலகைகளை உபயோகித்தால் இந்த வசதி வராது!

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press