பிளாக்கில் Static Page-ல் தெரியும் தேவையில்லாத விட்ஜெட்டுக்களை மறைக்க

நம்முடைய பிளாக்கில் நம்மை தொடர்பு கொள்ள முகவரிகள் மட்டும் நம்மை பற்றி சிறிய குறிப்புகள் ஆகியவற்றை நம் பிளாக்கரில் உள்ள Static Page வசதி மூலம் உருவாக்கி இருப்போம். அப்படி நம் தளத்தில் கொடுத்துள்ள Contact பக்கத்தை க்ளிக் செய்தால் நாம் கொடுத்துள்ள விவரங்கள் மட்டுமின்றி நம் பிளாக்கில் உள்ள அனைத்து விட்ஜெட்டுக்களும் தெரியும். இது நம் பக்கத்தை பார்ப்பதற்கு அழகற்று இருக்கும் மற்றும் அந்த பக்கம் திறக்கவும் அதிக நேரம் எடுக்கும்.
ஆகவே இந்த Static பக்கத்தில் உள்ள விட்ஜெட்டுக்களை எப்படி மறைப்பது என்று பார்ப்போம்.
  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design - Edit Html செல்லுங்கள்.
  • உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  • Expand widget Template க்ளிக் செய்யுங்கள்.
  • கீழே இருக்கும் கோடிங்கை கண்டு பிடிக்கவும். இது உங்களின் டெம்ப்ளேட்டிற்கு ஏற்ப சற்று மாற்றி இருக்கலாம். 
<b:widget id='HTML' locked='false' title='விட்ஜெட்டின் தலைப்பு' type='Profile'>
<b:includable id='main'>
விட்ஜெட்டுக்கான கோடிங் இங்கு இருக்கும்
</b:includable>
</b:widget>
  • மேலே உள்ள கோடிங்கை போல் நீங்கள் கண்டு பிடித்தவுடன் நான் கீழே சிவப்பு நிறத்தில் சேர்த்து இருக்கும் இரண்டு வரிகளை சரியாக அதற்க்கான இடங்களில் சேர்க்கவும்.
<b:widget id='HTML' locked='false' title='விட்ஜெட்டின் தலைப்பு' type='Profile'>
<b:includable id='main'>
<b:if cond='data:blog.pageType != "static_page"'>
விட்ஜெட்டுக்கான கோடிங் இங்கு இருக்கும்
</b:if>
</b:includable>
</b:widget>
  • சரியாக நீங்கள் அந்த கோடிங்கை சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி சேமித்து கொள்ளுங்கள்.
  • இப்படி நீங்கள் STATIC பக்கத்தில் மறைக்க விரும்பும் அனைத்து விட்ஜெட்டுக்களிலும் இதே முறையில் இந்த இரண்டு வரிகளை சேர்த்து பின் சேமித்து கொள்ளுங்கள்.
  • இப்படி செய்து விட்டால் இனி நீங்கள் Static பக்கத்திற்கு சென்றால் நீங்கள் மறைத்த எந்த விட்ஜெட்டும் தெரியாது. முயற்சி செய்து பாருங்கள்.
குரோம் நீட்சி- Orkut Chrome

நம்மில் பெரும்பாலவனவர்கள் கூகுள் வழங்கும் சமூக தளமான ஆர்குட்டில் அக்கௌன்ட் வைத்து இருப்போம். நீங்கள் ஆர்குட் உபயோகபடுத்தி கொண்டு இருந்தால் உடனே இந்த நீட்சியையும் நிறுவி கொள்ளுங்கள். இந்த நீட்சியை நிறுவினால் நமக்கு நண்பர்கள் கொடுக்கும் செய்திகள் உடனுக்கு உடன் இதில் தெரியும். மற்றும் ஆர்குட்டில் உள்ள அனைத்து வசதிகளையும் நாம் இதன் மூலம் பெறலாம்.

டுடே லொள்ளு 

பாவம் பொழச்சி போகட்டும் நாமாவது ஒரு பதக்கம் ஜெயித்து கொடுப்போம் இந்த பசங்களுக்கு 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments