உங்கள் பிளாக்கிற்கு கூகுள் கொடுத்துள்ள ரேங்க் என்ன - Updated Google Page Rank

உலகில் உள்ள இணையதளங்கள் கூகுள் தேடலில் கிடைப்பதை பொருது கூகுள் அந்த தளங்களுக்கு ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் போட்டு இருக்கிறது. இது மொழி வேறுபாடு இல்லாமல் அனைத்து தளங்களுக்கும் பொருந்தும். பிளாக்ஸ்பாட் தளங்களுக்கும் கூகுள் மதிப்பெண்ணை வழங்கி யுள்ளது. மொத்த மதிப்பெண் 10 இந்த 10 மார்க்குக்கு உங்கள் தளம் எவ்வளவு வாங்கியுள்ளது என கண்டறிவோம் வாருங்கள். பொதுவாக தமிழ் தளங்களுக்கு 2/10 மதிப்பெண்ணே பெரும்பாலும் கிடைக்கும். இப்பொழுது உங்கள் பிளாக்கின் மதிப்பெண்ணை கீழே பாருங்கள்.

இந்த லிங்கில் கிளிக் செய்து கூகுள் பேஜ் ரேங்க் தளத்திற்கு செல்லுங்கள். சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அந்த காலி கட்டத்தில் உங்களுடைய பிளாக்கின் URL கொடுத்து Check PR என்ற பட்டனை அழுத்தவும்.


  • பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள ஒரு verification code வரும்.
  •  அதை சரியாக பூர்த்தி செய்த பின்னர் அருகில் உள்ள Verify Now பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய பிளாக்கிர்கான ரேங்க் வந்திருக்கும்.

Google Page Rank விட்ஜெட்டை பிளாக்கரில் இணைக்க 

அந்த ரேங்க் விட்ஜெட்டை உங்கள் பிளாக்கரில் இணைக்க நினைத்தால் அதே பக்கத்தில் இருக்கும் லிங்கை கிளிக் உங்களுக்கு தேவையான பட்டனை வடிமைத்து கொள்ளுங்கள்.

  • இந்த லிங்கில் கிளிக் செய்து என்றால் உங்களுக்கு திரும்பவும் Verification Code கேட்கும் அதை கொடுத்து சென்றவுடன் கீழே இருப்பதை போன்ற கோடிங் விண்டோ வந்திருக்கும்.
  • அதில் ஒவ்வொரு கோடிங்கிற்கு நேராகவும் அதற்க்கான விட்ஜெட் பட்டன் இருக்கும் அதில் உங்களுக்கு தேவையானதை உறுதி செய்து கொண்டு அதற்க்கான கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் Design ==> Add a gadget ==> Html JavaScript சென்று இந்த கோடிங்கை சேர்த்து SAVE செய்து விட்டால் போதும் Google Page Rank விட்ஜெட் உங்கள் பிளாக்கரில் சேர்ந்து விடும். 
    இதையும் பாருங்கள்: 

    Comments