11/02/2011

ஜிமெயிலின் புதிய தோற்றம் மற்றும் புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்ய- Gmail's New Look [Video]

கூகுள் தனது தளங்களின் தோற்றங்களை தற்பொழுது மாற்றி அமைத்து வருகிறது. Google Analytics, Blogger, Adsense, Feedburner இப்படி பல தளங்களின் தோற்றத்தை சமீப காலமாக மாற்றி அமைத்து வருகிறது. அந்த வரிசையில் ஜிமெயிலில் தற்பொழுது பல புதிய வசதிகளை கொண்ட தோற்றத்தை அறிமுகபடுத்தி உள்ளது. இந்த வசதிகள் கூடிய விரைவில் அனைத்து ஜிமெயில் வாசகர்களுக்கும் வரப்போகிறது. நீங்கள் இந்த மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். உங்களுக்கு இந்த புதிய மாற்றங்கள் தேவையென்றால் உடனே மாற்றி கொள்ளலாம். எப்படி புதிய தோற்றத்தை பெறுவது என கண்டறிய கீழே தொடருங்கள்.
புதிய தோற்றம் ஆக்டிவேட் செய்ய:

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து ஜிமெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். வலது பக்க கீழே பகுதியில் ஒரு Switch to the new look லிங்க் புதிதாக தெரியும்.

  • அந்த லிங்க் மீது கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்த உடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ வரும்.
  • இப்பொழுது உங்களின் ஜிமெயில் கணக்கு புதிய தோற்றத்தில் மாறி இருக்கும் உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Continue to the New look என்ற பட்டனை அழுத்தினால் புதிய தோற்றத்துடன் உங்களின் ஜிமெயில் கணக்கு வந்துவிடும். 

புதிய தோற்றத்தில் உள்ள வசதிகள்:

புதிய வசதிகள் என்ன உள்ளது என சுலபமாக அறிய கீழே உள்ள வீடியோவை 
பாருங்கள். 


மற்றும் கீழே உள்ள Screenshot பாருங்கள். Reply மற்றும் Forward வசதிகள் புதிய முறையில் தெரிகிறது பாருங்கள்.

ஜிமெயில் தோற்றத்தை நம் விருப்படி அமைத்து கொள்ளலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


சைட்பாரை நம் விருப்படி Adjust செய்து கொள்ளலாம். 

இப்படி பல வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது ஜிமெயில் நிறுவனம். 

மீண்டும் பழைய தோற்றத்தை பெற:

ஒருவேளை இந்த புதிய தோற்றம் பிடிக்கவில்லை என்றால் மறுபடியும் பழைய தோற்றமே வேண்டும் என நினைத்தால் Settings கிளிக் செய்து Revert to the old look temporarily என்ற வசதியை தேர்வு செய்தால் இன்னொரு விண்டோ வரும் அதிலும் Revert to the old look temporarily மீண்டும் பழைய தோற்றம் வந்துவிடும்.
அனால் இது தற்காலிகமானதே கூடிய விரைவில் அனைத்து கணக்கிருக்கும் புதிய தோற்றம் கட்டாயமாக்கப்படும். 

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைத்து நண்பர்களுக்கும் இதை அறிய தாருங்கள். 

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home