Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

உங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற

இணையத்தில் நம் சொந்த கருத்துக்களை பகிர இந்த பிளாக்ஸ்பாட் தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. வலைப்பதிவு என்பது என்ன என்று கூட தெரியாமல்  பதிவர்களில் பெரும்பாலானோர்(என்னையும் சேர்த்து) விளையாட்டாக வலைப்பதிவு தொடங்கி பதிவு போடுகிறோம். இப்படி விளையாட்டாக பதிவு போட ஆரம்பித்து நாளடைவில் நாம் விளையாட்டாகா தொடங்கிய வலைப்பதிவு பிரபலமானவுடன் நமக்கென்று ஒரு சொந்த டொமைன் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றும். 

ஆனால் இப்படி தொடங்கினால் இந்த இப்பொழுது வரும் வாசகர்களை இழந்து விடுவோமோ அல்லது புது டொமைன் வாங்கினால் நாம் தளத்தில் உள்ள அனைத்து விட்ஜெட்டுக்களையும் திரும்பவும் இணைக்கவேண்டுமா என்ற அச்சத்தின் பேரிலேயே பெரும்பாலானோர் டொமைன் வாங்குவதை தவிர்க்கின்றனர். கவைலையை விடுங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்றுவது எவ்வாறு என்று கூறுகின்றேன். இதை செய்ய நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை நம் பிளாக்கிலேயே செய்து முடித்து விடலாம். (ஆனால் ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் இப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு இருக்கும் அலெக்சா ரேங்க் புதிய டொமைன் வாங்கினால் இருக்காது)
  • Dassboard - Settings - Publishing -பகுதிக்கு செல்லுங்கள்.
  • சென்று அங்கு உள்ள Custom Domain என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.வரும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய டொமைன் பெயரை சரியாக கொடுக்கவும்.

  • பெயரை கொடுத்து Check Availability என்பதை க்ளிக் செய்யவும். நீங்கள் கொடுத்த URL காலியாக இருந்தால் yourdomain.com is available என்ற செய்தி வரும் இல்லையேல் உங்களுக்கு கொடுத்த பெயருக்கு சார்ந்து உள்ள URL கொடுக்கும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
  • அடுத்து வரும் விண்டோவில் Continue to registration என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் உங்களின் தகவல்களை சரியாக பொருத்தி accept கொடுக்கவும்.
  • அடுத்து payment செய்யும் விண்டோ வரும் இதில் உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டின் எண்ணை சரியாக கொடுத்து உங்களுடைய domain உருவாக்கி கொள்ளுங்கள்.
  • கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும். 

அவ்வளவு தான் இனி உங்களுடைய பிளாக்ஸ்பாட் URL கொடுத்தால் நேரடியாக உங்கள் புதிய டொமைன் url தளம் ஓபன் ஆகும். ஆகையால் உங்கள் வாசகர்களுக்கும் எந்த கடினமும் இருக்காது.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

டுடே லொள்ளு 
Photobucket
அய்யோ என் கொம்பு இந்த நெருப்ப நான் சும்மா விட மாட்டேன்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

28 comments :

  1. அதுக்கு எவ்வளவு செலவு பண்ணனும்னு சொல்லியிருந்தீங்கன்னா நல்லா இருக்கும்..

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்.. நன்றி..

    ReplyDelete
  3. உபயோகமான தகவல் நண்பா..

    ReplyDelete
  4. நல்ல தகவல்
    சசி அண்ணா

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு..

    ReplyDelete
  6. வழக்கம்போலவே பயனுள்ள தகவல்

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  7. எம்.ஏ.சுசீலாNovember 9, 2010 at 2:18 PM

    என் கேள்விக்குப் பதிவாகவே பதில் சொன்னதற்கு நன்றி.ஓட்டுப் பட்டைகளை மாற்றவேண்டி வருமோ

    ReplyDelete
  8. //எம்.ஏ.சுசீலா said...
    என் கேள்விக்குப் பதிவாகவே பதில் சொன்னதற்கு நன்றி.ஓட்டுப் பட்டைகளை மாற்றவேண்டி வருமோ//

    தேவையில்லை எதவும் மாறாது அனைத்தும் அப்படியே இருக்கும்.

    ReplyDelete
  9. உபயோகமான பயனுள்ள தகவல

    ReplyDelete
  10. நமக்கு ப்ளாக்ஸ்பாட்டே போதுங்க.

    ReplyDelete
  11. பிளாக் ஸ்பாட்டை டொமைனா மாத்தரதுல என்ன கூடுதல் நன்மைகள்?

    ReplyDelete
  12. இந்த டாலர் கணக்கெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுங்க. இந்தியன் ருபீஸ் தான் சரி வரும்.

    ஏதாவது ஒரு டொமைன் ஹோஸ்டிங் கம்பெனியில் ரெஜிஸ்டர் செய்து அதில் நம் ப்ளாக் முழுதையும் முழுதாக ஹோஸ்ட் செய்ய என்ன செய்யனும் ?

    ReplyDelete
  13. sasi சசி டுடே லொள்ளு சூப்பர்.கடந்த ஒரு வாரத்தில் இதுவே டாப்

    ReplyDelete
  14. நல்ல தகவல்

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  15. உங்கள மாதிரி நிறைய பதிவை போட்டவங்க மாத்தலாம்...! எங்களை மாதிரி புதிய பதிவர்களுக்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும்...!

    ReplyDelete
  16. அருமைங்க சசி. தெளிவா விளக்கீட்டீ்ஙக..!!

    ReplyDelete
  17. எம்.ஏ.சுசீலாNovember 16, 2010 at 5:16 PM

    எனது லேஅவுட்டில் சைட்பார் இயங்க மறுக்கிறது.முயற்சியில் இருப்பதாகவே எப்போதும் காட்டுகிறது.டெம்லேட்டை மாற்ற நான் விரும்பவில்லை.என்னசெய்யலாம்.
    உங்கள் வலையை என் முகப்புப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.காண்க.

    ReplyDelete
  18. பெறுமதியான தகவல் நண்பரே! நானும் ட்ரை பண்ணிப் பார்க்கவா? பாஸ் அப்படியே நம்ம கடைக்கும் வாங்க - உங்க பேச்சைக் கேட்டுத்தான் டிசைன் பண்ணி வச்சிருக்கேன்!

    ReplyDelete
  19. பெறுமதியான தகவல் நண்பரே! நானும் ட்ரை பண்ணிப் பார்க்கவா? பாஸ் அப்படியே நம்ம கடைக்கும் வாங்க - உங்க பேச்சைக் கேட்டுத்தான் டிசைன் பண்ணி வச்சிருக்கேன்!

    ReplyDelete
  20. வணக்கம் சசி உங்களுடைய இந்த பதிவை படிச்சுத்தான் நான் டொமைன் வாங்குனேன் அதுக்கப்புறம் நிறைய பிரச்சினைகள் ஃபாலோவர்ஸ்க்கு போஸ்ட் அப்டேட் ஆக மாட்டேன்னுது என்ன செய்யறதுன்னே தெரியலை தங்கள் உதவி தேவை நன்றி

    ReplyDelete
  21. @ப்ரியமுடன் வசந்த்

    நண்பரே உண்மைதான் நீங்கள் உங்கள் தளத்தின் URL மாற்றிவிட்டதால் பழைய URL கொடுத்து Blogroll பகுதியில் இணைத்து இருப்பவர்களின் தளத்தில் புதிய பதிவுகள் அப்டேட் ஆகாது. ஆகவே உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய அறிவிப்பு செய்தியை கொஞ்ச நாட்களுக்கு வைத்தால் உதவியாக இருக்கும். மற்றும் Friend Connect Newsletter வசதியை பயன்படுத்தி உங்களை பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் இந்த அறிவிப்பை மெயிலில் அனுப்பலாம்.

    Bloglist பகுதியில் அப்டேட் ஆகாதே தவிர அவர்களின் Dassboard பகுதியில் புதிய பதிவுகள் எப்பவும் போல அப்டேட் ஆகும். மேலும் இதைப்பற்றி வேறு ஏதேனும் சந்தேகம் என்றால் கேட்கவும் தீர்க்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  22. migavum nandri sasi.....i l buy a domain.

    http://pangusanthaielearn.blogspot.com/

    ReplyDelete
  23. vanakkam sasi, domain pudusa vankinal active aaga 2,3 days aaguma?

    ReplyDelete
  24. ஒரு Sub டொமைனை own டொமைனாக வாங்க மொத்த செலவு எவ்வளவு செலவாகும். அண்ணா

    ReplyDelete
  25. ஒரு சப் டொமைனை ஒன் டொமைனாக வாங்க மொத்த செலவு எவ்வளவு செலவாகும். அண்ணா

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press