11/30/2010

பேஸ்புக்கில் குறிப்பிட்ட நண்பர்களின் புகைப்படத்தை மட்டும் எப்பொழுதும் முதலில் காட்ட

 பேஸ்புக் வளர்ச்சியை பார்த்து வியப்படைந்து கொண்டிருக்கிறது இன்றைய உலகம். சமூக தளமான பேஸ்புக் நம் நண்பர்கள் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம்முடைய செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் ஒரு பாலமாக அமைந்து உள்ளது. நாம் பேஸ்புக்கில் ஒவ்வொருமுறை செல்லும் போதும் நண்பர்கள் பகுதியில் வேறுவேறு படங்களை காட்டும்.  
Read more »

Labels: , ,

கூகுளில் தேட மவுசின் உதவி தேவையில்லை Arrow கீகள் போதும்- No Add on

நாம் வழக்கமாக ஏதேனும் தேட வேண்டும் என்று நினைத்தால் உடனே நம் கண்முன் தோன்றுவது கூகுள் தான். நாம் கேட்டதை கொடுக்கும் கூகுள் தளத்தில் இன்னொரு வசதி மவுசின் உதவி இல்லாமல் நம் கீபோர்டின் Arrow கீகள் உபயோகித்தே தேடி கொள்ளலாம். இந்த வசதி உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. தெரியாத சிலருக்காக இந்த பதிவு.
Read more »

Labels:

11/29/2010

உங்களுடைய தளத்தை GOOGLE ADSENSE தடை செய்துள்ளதா என கண்டறிய

நம் தமிழ் பதிவர்களில் பெரும்பாலும் GOOGLE ADSENSE -ல் நம் பிளாக்கை அனுப்பி அனுப்பி சோர்ந்தே போய்விட்டு இருப்போம். பெரும்பாலும் GOOGLE ADSENSE  தமிழ் பிளாக்ஸ்பாட் தளங்களின் கோரிக்கையை நிராகரித்து விடும். ஒருவேளை தங்களுடைய பிளாக் பெரிய அளவிலான ஹிட்ஸ் பெற்றிருந்தால் மட்டுமே கோரிக்கை ஏற்று கொள்ள படுகிறது.
Read more »

Labels:

பேஸ்புக்கில் வேண்டாத நபரை தடை செய்ய

 தினம் தினம் பேஸ்புக்கின் பயன்பாடு அதிகரித்து கொண்டே போகிறது. பேஸ்புக் வாசகர்கள் அவர்களின் நண்பர்களிடம் தான் விஷயங்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது.  தெரியாத முகங்களை கூட சுலபமாக நண்பர்களாக்கி கொள்ளலாம்.  இந்த பேஸ்புக்கில் எப்படி வேண்டாத ஒரு நபரை தடை செய்வது என்று பார்ப்போம்.
Read more »

Labels: ,

11/27/2010

பிளாக்கர் SLIDE SHOW-ல் நம் புகைப்படங்களை கொண்டு வர- புதியவர்களுக்காக

நாம் நம்முடைய படங்களை பிளாக்கில் Slide show ஆக கொண்டு வரும் வசதி நம் பிளாக்கில் உள்ளது. என்னதான் நம் பிளாக்கிலேயே இந்த வசதி இருந்தாலும் நாம் நம்முடைய படங்களை நேரடியாக பிளாக்கரிலேயே படங்களை அப்லோட் செய்ய முடியாது.Picasa, Flickr போன்ற இணைய தளங்களில் நம் புகைப்படங்களை அப்லோட் செய்து விட்டு அந்த போட்ட்க்களின் லிங்க் இங்கு கொடுத்தால் மட்டுமே பிளாக்கில் நம் புகைப்படங்களை Slideshow வாக கொண்டு வர முடியும். அது எப்படி என்று இங்கு கீழே காண்போம்.
Read more »

Labels:

11/26/2010

கணினியை வேகமாக Defragment செய்ய சட்ட ரீதியான மென்பொருள் இலவசமாக

கணினியின் செயல் திறனை வேகபடுத்த அனைவரும் நம் கணினியை Defragment செய்வோம். Defragment என்பது நாம் கணினியில் சேமிக்க படும் அனைத்து பைல்களும் சிறு சிறு படுதிகலாக பிரிக்கப்பட்டு நம் கணினியில் சேமிக்க படும். இவை அனைத்தையும் வரிசையாக அடுக்கி வைப்பதே Defragment ஆகும். இதை செய்ய நம் கணினியிலேயே செய்யும் வசதி இருந்தாலும் அதில் செய்தால் மணிகணக்கில் காத்து கிடக்க வேண்டும். இந்த வேலையை வேகமாகவும் மிகவும் எளிதாகவும் செய்ய ரூபாய் 10,000 மதிப்புள்ள சட்ட ரீதியான மென்பொருள் முற்றிலும் இலவசமாக.
Read more »

Labels:

11/25/2010

உங்களின் புதிய போட்டோக்களை ஒரே நிமிடத்தில் பழைய கால போட்டோவாக மாற்றலாம்

வளர்ந்துவிட்ட நவீன தொழில் நுட்பத்தில் போட்டோக்களை மிகவும் துல்லியமாகவும் அழகாகவும் எடுக்கும் வசதிகள் உள்ளது. இந்த முறையில் நாம் நமக்கு தேவையான போட்டோக்கள எடுத்து மகிழ்கிறோம். ஆனால் வீட்டில் நம் பாட்டி அல்லது தாத்தாவின் போட்டோக்கள் இருப்பதை பார்த்து இருப்போம் அந்த போட்டோக்கள் தெளிவற்றும் கலர் இழந்தும் காணப்படும். இதை போன்று நம் நவீன டிஜிட்டல் படங்களையும் எப்படி இந்த படங்கள் போல மாற்றலாம் என்று பார்ப்போம்.
Read more »

Labels:

11/24/2010

Facebookக்காக பிரத்யோகமாக தயாரிக்க பட்ட பிரவுசர்- RockMelt

 கூகுளிற்கு இணையாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு இணைய தளம் பேஸ்புக் தளமாகும். இது கூகுளிற்கு அனைத்து வகையிலும் போட்டியிடும் வகையில் தற்போது தான் மெயில் வசதியை துவக்கியது. தற்போது அதற்காக ஒரு பிரவுசரும் வெளி வந்து உள்ளது. இந்த பிரவுசர் மிகவும் வேகமாக செயல் படுகிறது. இந்த பிரவுசர் இருந்தால் நாம் பேஸ்புக் தளதிர்க்கே செல்ல வேண்டியதில்லை. அனைத்து பேஸ்புக் தகவல்களும் இங்கேயே உள்ளன.
Read more »

Labels: , , , ,

11/23/2010

வலை பக்கங்களை நான்கு பக்கமும் சுழற்றி சுழற்றி பார்க்க -Chrome AddOn

நாம் இணையத்தில் பல பக்கங்களை பார்த்து கொண்டு இருப்போம். ஒரு வித்தியாசத்திற்க்காக  இந்த பக்கங்களை தலை கீழாக பார்க்கலாமா. நில்லுங்க என்ன பண்றீங்க கம்யுட்டரை தலைகீழாக கவிழ்த்து பார்பீர்களா அதற்கு அவசியமே இல்லை இதற்கு ஒரு நீட்சி உள்ளது. இந்த நீட்சியை நம் கணினியில் நிறுவி Win + ; (semicolon) தட்டினால் நாம் பார்த்து கொண்டு இருக்கும் பக்கம் நான்கு பக்கமும் சுழன்று சுழன்று வரும். நம் குழந்தைகளை குஷி படுத்தலாம்.
இது போன்று வலை பக்கங்களை நான்கு பக்கமும் சுழற்றி சுழற்றி காட்டலாம். குழந்தைகளுக்கு இந்த ரகசியத்தை கூறாமல் அவர்களை வெறுப்பு ஏற்றி விளையாடலாம்.
 இந்த நீட்சியை தரவிறக்க கீழே உள்ள டவுன்லோட் பட்டனில் க்ளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.டுடே லொள்ளு 

போதுண்டா திட்டினது வாய மூடுடா, ஐயோ முடியலடா நிறுத்துடா 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

Labels: ,

பிளாக்கரில் நுழைவு(Login) ஈமெயிலை எப்படி மாற்றுவது

நாம் பிளாக் ஆரம்பிக்கும் ஆசையில் நாம் வைத்திருக்கும் போது ஜிமெயில் ஐடியை கொடுத்து ஆரம்பித்து விட்டு இருப்போம். ஆனால் பின்பு தான் யோசிப்போம் அட நாம் வேறு ஈமெயில் ஐடியை கொடுத்து இருக்கலாமே. ஆனால் பிளாக்கரில் அதை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் இருந்தால் கீழே உள்ள முறைகளை கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும். இதற்கு பிளாக்கரில் நேரடியாக வசதி இல்லை. இதை மாற்ற மறைமுகமாக ஒரு வழி உள்ளது.
Read more »

Labels:

11/22/2010

மிகவும் பயனுள்ள வித்தியாசமான Related Post Widget

நாம் பிளாக்கில் எழுதும் பதிவுகளின் கீழே பழைய பதிவுகளின் லிங்க் காட்ட அனைவரும் Related post விட்ஜெட் உபயோகித்து கொண்டு இருப்போம். இதில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Link within தளத்தின் விட்ஜெட் ஆகும். இதில் என்ன பிரச்சினை என்றால் நாம் நம் தளத்தில் பதிவுகளை delete செய்தாலும் கூட அந்த பதிவுகளின் லிங்க் தொடர்ந்து காட்டப்பட்டு கொண்டே இருக்கும். மற்றும் அதிக பட்சம் 5 பதிவுகளின் லிங்க் மட்டுமே இதன் மூலம் காட்ட முடியும். ஆனால் இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த விட்ஜெட்டில் நமக்கு தேவையான அளவு பதிவுகளை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள படத்தில் பாருங்கள் சுமார் 14 பதிவுகளின் லிங்க் இருக்கும்.
Read more »

Labels: ,

உங்கள் பிளாக்கில் பதிவு எழுத மற்றவர்களை எப்படி அழைப்பது - Guest Post

இந்த முறை நம் தமிழ் பதிவர்களிடையே இல்லாமல் இருந்தாலும் ஆங்கில தளங்களில் கொடிகட்டி பறக்கும் ஒரு வசதியாகும். . இன்னும் சொல்ல போனால் பிரபல இணையதளங்கள் Guest post க்கு பணம் கூட வாங்குகின்றனர். ஒரு சில நண்பர்கள் பிளாக் ஆரம்பித்து பராமரிக்கும் அளவிற்கு நேரம் இருக்காது. அவர்களும் இந்த முறையில் பதிவு போடலாம்.இதனால் நமக்கு என்ன பயன்கள் என்று நீங்கள் கேட்கிறீர்களா உங்கள் பிளாக் கூடிய விரைவிலேயே பிரபலமாகும்.
Read more »

Labels:

11/20/2010

CCleaner கணினியில் இருந்தால் கண்டிப்பாக இந்த மென்பொருளும் வேண்டும்

நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அகற்றி நம் கணினியை சுத்தமாக வைத்திருக்க நாம் அனைவரும் உபயோகிக்கும் இலகுவான ஒரு மென்பொருள் CCleaner. இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி இருந்தால் கூடவே கண்டிப்பாக இந்த CCEnhancer மென்பொருளும் வைத்து கொள்ளுங்கள். இந்த மென்பொருள் கூட இருந்தால் CCleanerன் பயன்பாடும் மேலும் அதிகரிக்கிறது.
Read more »

Labels:

11/19/2010

உங்கள் பேஸ்புக் கணக்கின் ஒட்டு மொத்த விவரங்களையும் டவுன்லோட் செய்ய

நேற்றைய நாள் மிகவும் கசப்பாக இருந்தது இந்த கசப்பான நாளில் சில நல்ல சம்பவங்களும் நடந்தன. நானே எதிர்பார்க்காத அளவிற்கு நண்பர்கள் உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து எனக்கு ஆதரவாக கமென்ட் போட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. போனில் தொடர்பு கொண்டு பேசிய ஜாக்கி அண்ணன், கவுசல்யா அக்கா, வெறும்பய,கவிதை காதலன், சிதறல்கள் ரமேஷ் இன்னும் நிறைய பேர் உற்சாக படுத்தினார்கள். அனைவருக்கும் மிக்க நன்றி. 
************************************************
இணையத்தில் கூகுளுக்கே போட்டியிடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனம் தான் இந்த பேஸ்புக் சமூகதளம். இதில் நம்மில் பெரும்பாலானோர் உறுப்பினராக உள்ளனர். இதில் நாம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். இவைகள் அனைத்தையும் எப்படி டவுன்லோட் செய்வது. இது ஒரு சுலபமான விஷயம் இதற்காக நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இணைக்க வேண்டியதில்லை பேஸ்புக் தளத்திலேயே செய்து விடலாம்.

டவுன்லோட் செய்யப்படும் விவரங்கள்:
 • பேஸ்புக்கில் உள்ள நண்பர்களின் பட்டியல்.
 • பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்த வீடியோக்கள்.
 • பேஸ்புக்கில் உங்களுக்கு வந்துள்ள மொத்த கருத்துக்கள்.
 • பேஸ்புக்கில் வெளியிட்ட உங்கள் பதிவுகளின் அனைத்து விவரங்கள்.
 • நீங்கள் பேஸ்புக்கில் சேர்த்து இருந்த அனைத்து புகைப்படங்கள் (Albums, Profile picture). 
 • நீங்கள் சேர்த்திருந்த நிகழ்வுகள்.
 • உங்களின் சுவர் பகுதி இப்படி அனைத்தையும் ஒரே நேரத்தில் சுலபமாக டவுன்லோட் செய்யலாம். 
டவுன்லோட் செய்யவேண்டிய முறை:
 • முதலில் உங்கள் பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.
 • சென்று உங்கள் கணக்கு(settings) பகுதிக்கு செல்லுங்கள். அதில் கணக்கு அமைப்புகள்(Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள். 
உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் ஆகிலத்தில் மட்டும் தான் இந்த வசதி காணப்படுகிறது.

அடுத்து வரும் பக்கத்தில் Settings பகுதியில் உள்ள Download Your Information என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

உங்களுக்கு வரும் விண்டோவில் கீழே உள்ள படங்களில் செய்திருப்பதை போல செய்து கொண்டே முன்னேறி செல்லுங்கள். 

முடிவில் உங்களுக்கு இது போன்ற செய்தி வரும். இது போல வந்தால் உங்களுடைய கோரிக்கை பேஸ்புக் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. அவர்கள் அதை பார்த்து உங்களுக்கு மெயிலில் டவுன்லோட் லிங்க் அனுப்புவார்கள் இதற்கு சுமார் 4 அல்லது 5 மணி நேரங்கள் கூட ஆகலாம் மெயில் வரும் வரை பொறுமை காக்கவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல மெயில் அனுப்புவார்கள்.

படத்தில் காட்டியுள்ளபடி மெயில் வந்தால் உங்கள் டவுன்லோட் ரெடியாகிவிட்டது. அதை பெற படத்தில் காட்டியுள்ள  இடத்தில் லிங்கில் க்ளிக்  செய்தால் உங்களை நேராக டவுன்லோட் பகுதிக்கு அழைத்து செல்லும். அங்கு உங்கள் பேஸ்புக் பாஸ்வேர்ட் கேட்க்கும் அதை கொடுத்து விட்டு அருகில் உள்ள Continue பட்டனை அழுத்தவும்.

Continue பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Download now என்ற பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள அனைத்து விவரங்களும் டவுன்லோட் ஆகி விடும். 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

டுடே லொள்ளு  

எவ்ளோ நேரந்தான் வேலை செய்ற மாதிரியே சீன் போடுவ சீக்கிரம் வா ஒரு காப்பி சாப்பிடுவோம். 
(உண்மையில் ஆபிசில் என்னை இது போல் தான் கூறுவார்கள்) 

Labels: , ,

11/18/2010

தன்னிலை விளக்கம் - தயவு செய்து கருத்து கூறவும்.

(இந்த பதிவுக்கு Comment moderate கிடையாது நேரடியாக உங்கள் கருத்துக்கள் பப்ளிஷ் ஆகும்)
நான் ஆங்கில தளத்தின் தகவல்களை காப்பி அடிப்பதாக நிறைய பேர் குறை கூறி உள்ளனர். அப்படின்னா என் தளம் ஆங்கில தளமா.  செய்திகளை பார்க்கிறேன் பகிர்ந்து கொள்கிறேன். தொழில் நுட்பத்தை என்னால் கண்டுபிடிக்க முடியாது அந்த அளவுக்கு அறிவாளியும் இல்லை.சில பிளாக்கர் டிப்ஸ்களை ஆங்கில தளத்தில் இருந்து  காப்பி அடிக்கிறேன் காப்பி அடிக்கிறேன் என்று சொல்றீங்களே அதே எவ்வளவு பேருக்கு பயனுள்ளதாக உள்ளது அதை பார்க்க மறுக்கிறீர்களே அது ஏன்.எவ்வளவு பேர் அவர்களின் தளங்களில் இந்த விட்ஜெட்களை போட்டு 
பயனடைகின்றனர் என்று பார்க்க உங்கள் மனம் ஏன் தடுக்கிறது. 

அந்த தளத்தில் உள்ள கோடிங்கை புரிந்து அதை மற்றவர்களுக்கு சேர்க்க கொடுப்பது தவறா. ஏன் இந்த பொறாமை குணம் தமிழனுக்கே உரித்தானதா. இதே ஆங்கில தளத்தில் காப்பி செய்து போட்டு இருந்தால் Very Nice இன்னு கமென்ட் போட்டுட்டு உன் தளத்தில் போட்டுக்க மாட்டியா. தமிழன் பிரபலமான உங்களுக்கு எரிச்சலாக இருக்கா.   
ஒண்ணு சொல்றேன் கேளுங்க ஆங்கில தளங்களும் மற்ற தளத்தில் இருந்து காப்பி செய்து சிறிது மாற்றம் செய்து தான் போடுகின்றன.

வெறும் காப்பி மட்டும் செய்து போட்டால் போதாது என்னால் முடிந்த வகையில் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து சந்தேகங்களை தீர்க்கிறேன்.

நான் காப்பி அடித்தது தவறா இல்லை பிரபலமானது தவறா?
கிரிக்கெட் பதிவு எழுதுபவர்களுக்கு:
 • கிரிக்கெட்டை இவர்கள் தான் கண்டுபிடித்தார்களா 
 • புள்ளி விவரங்களை இவரே கண்டு பிடித்து எழுது கிறார்களா 
 • பரம்பரை பரம்பரையாக தாத்தா அப்பா இவர் என்று புள்ளி விவரங்கள் சேமிக்க படுகிறதா. 
http://www.espncricinfo.com/. ஆங்கில தளத்தில் இருந்து தகவல்களை திரட்டி நமக்கு கொடுக்கின்றார். சுவாரஸ்யமான தகவலை நம் தாழ்மொழியில் பகிர்ந்து கொள்கிறார். இவர்கள் இல்லை என்றால் நாம் புரிந்தும் புரியாமலும் ஆங்கில தளங்களுக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
*********************************
சினிமா விமர்சனம் எழுதுபவர்களுக்கு:
 • படத்தில் பார்த்ததை நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி என்றால் படத்தில் இருந்து காப்பி அடிக்கிறார்கள் என அர்த்தமா. 
 • ஆங்கில படங்களை பற்றி பகிர்ந்தால் ஆங்கில படங்களில் இருந்து காப்பி அடித்து எழுது கிறார்கள் என அர்த்தமா.  
படத்தினை பற்றி அவரின் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். அவ்வளவு தான்.

சிறிய அன்பான வேண்டுகோள்:
இப்பொழுதெல்லாம் ஏதேனும் படத்தை பார்க்க வேண்டுமென்றால் முதலில் அதற்க்கான விமர்சனங்களை பதிவுலகில் பார்த்த பிறகே நல்ல விமர்சனம் இருக்கும் படத்தை பார்க்க வேண்டிய எண்ணம் தோன்றுகிறது.  மற்ற படங்களை பார்ப்பது தவிர்க்க படுகிறது. ஒரு படம் என்பது தனிப்பட்ட ஒருவரின் உழைப்பை மட்டுமல்லாது நூற்றுகணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகிறது. 

ஏற்க்கனவே திருட்டு விசிடியால் அவதிப்பட்டு வரும் திரை உலகத்திற்கு மேலும் சிக்கலை தரும் என்பதில் ஐயமில்லை. இங்கு பத்திரிக்கை சுதந்திரத்தை பார்க்காமல் இதனால் பாதிக்க படும் நூற்றுகணக்கான ஊழியர்களை மனதில் வைத்து கொள்ளவும்.

 நீங்கள் விமர்சனம் எழுதுங்கள் குறைந்தது ஒரு 10 நாள் கழித்தாவது எழுதுங்கள்.
**********************************
லோஷன் என்பவர் தளம் எனக்கு பிடித்தது ஒன்று அதில் எவ்வளவோ பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தது உள்ளது. எவ்வளவோ நல்ல பதிவுகள் இருந்தும் இந்த சுமாரான பதிவை நான் காப்பி அடிக்க காரணம் என்ன. உனக்கு கிரிக்கெட்டை பற்றி என்ன தெரியும் என்று கேட்ட நண்பர்களிடம் கொடுத்த சவாலுக்கு அதை காப்பி செய்து என் பிளாக்கில் போட்டு இருந்தேன். காப்பி செய்வது தவறு என்றே எனக்கு அப்போது தெரியாது இதை நான் அவருக்கு மெயிலில் விளக்கமாக தெரிவித்தேன் ஆனால் அவர் அதை ஏற்க்கவில்லை. அவர் கூறிய உடன் அதை நான் நீக்கி விட்டேன்.இதற்காக அவரிடம் எத்தனையோ முறை மன்னிப்பும் கேட்டு இருந்தேன்.  linkwithin உபயோகித்து இருந்ததால் பதிவை அழித்தாலும் அந்த லிங்க் காட்ட பட்டே இருந்தது அதனால் தான் அந்த விட்ஜெட்டையே நீக்கினேன்.
*****************************************
(இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. சசிகுமார திட்டினா எதுவுமே கேட்க்க மாட்டான் இன்னு கண்டபடி திட்டுவதை நானும் எவ்வளவோ காலம்தான் கேட்டுக்கொண்டு பொறுமையாக இருப்பது,எனக்கும் உணர்வுகள் உள்ளனவே )

பிளாக்கர் டிப்ஸ் தருவது குற்றமென்றால் நான் இனி பிளாக்கர் டிப்ஸ் தகவலை தருவதா வேண்டாமா நீங்களே தயவு கூர்ந்து சொல்லுங்கள். இதனால் பாதிக்க படுவது நானல்ல.
தொடர்புக்கு - 99620 64266

Labels:

11/17/2010

நினைத்த இடத்தில் கூகுள் மற்றும் விக்கியில் தேடலாம்- Chrome Add On

இணைய உலவிகளில் மூன்றாவது பிரபலமான உலவி உள்ளது இந்த கூகுளின் வெளியீடான இந்த கூகுள் KROM உலவி. இணைய உலவிகளில் வேகமாக செயல்படும் வகையில் வடிவமைத்து இருப்பதால் அனைவரும் இதனை விரும்புகின்றனர். கூகுள் குரோம் உபயோகிப்பவர்களுக்கு மேலும் ஒரு பயனுள்ள வசதி இணையத்தில் எந்த இடத்தில் இருந்தும் கூகுளில் தேடலாம். கூகுள் மட்டுமலாமல் விக்கிபீடியா மற்றும் மேலும் இரு தளங்களில் கூட தேடி கொள்ளலாம். இவ்வசதியை பெற நம் கணினியில் ஒரு நீட்சியை(Add-on) நிறுவ வேண்டும்.
Read more »

Labels: ,

11/16/2010

உங்கள் கணினியை சுலபமாக Auto Backup எடுக்க- Free Software

நாம் பெரும்பாலும் உபயோகபடுத்தும் கணினியில் C டிரைவ் தான் அதிகமாக உபயோகிப்போம். இந்த டிரைவில் தான் நம் கணினியின் மென்பொருட்கள் நிருவபட்டிருக்கும். ஆகையால் பிரச்சினையும் இந்த டிரைவில் தான் அதிகமாக வரும். ஆகவே நம்முடைய டேட்டாவை பாதுக்காக்க Backup எடுத்து வைத்து கொள்வோம். ஒரு இலவச மென்பொருளை பயன்படுத்தி இந்த வேலையை எளிதாக  செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதில் இன்னொரு சிறந்த வசதி என்னவென்றால் நம்முடைய டேட்டா தானாகவே(automatic) எடுக்கும் வசதி.
Read more »

Labels:

11/15/2010

Feed Burner மெயிலில் உங்கள் பிளாக்கின் லோகோவை இணைக்க

பிளாக் வைத்திருக்கும் அனைவரும் Feedburner பற்றி அறிந்து இருப்போம். நம்முடைய தளத்திற்கு வரும் வாசகர்கள் நம் பதிவை அவர்களின் ஈமெயிலில் பெற இந்த வசதி பயன்படுகிறது.  ஆனால் இதன் மூலம் அனுப்படும் மெயிலில் எப்படி நம்முடைய பிளாக்கின் லோகோவை சேர்ப்பது என்று இங்கு பார்ப்போம்.  இது போல் மாற்றினால் நம்முடைய மெயில் நம் தளத்தின் லோகோவோடு வாசகர்களுக்கு செல்லும். .
மேலேயுள்ள படத்தில் இருப்பது போன்று எப்படி உங்கள் பிளாக்கின் லோகோவை இதில் வரவைப்பது என்று பார்க்கலாம்.
 • முதலில் உங்களின் Feedburner அகௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
 • Publicize - Email Subscription - Email branding பகுதிக்கு சொல்லுங்கள்.  உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 • அதில் நான் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் உங்கள் லோகோவுக்கான URL கொடுக்கவும்.
 • நீங்கள் URL கொடுத்தவுடன் உங்கள் மெயிலின் மாதிரியில் நீங்கள் கொடுத்த லோகோ வந்திருக்கும். 
 • மற்றும் அதற்க்கு கீழே சில வசதிகள் இருக்கும் அதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி கொள்ளுங்கள்.
 • வேண்டிய மாற்றங்கள் செய்த பின்னர் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்துங்கள். உங்களுடைய மாற்றங்கள் சேமிக்க பட்டு விடும். 
 • இனி உங்கள் Subscriber அனைவருக்கும் உங்கள் தளத்தின் லோகோவோடு மெயில் செல்லும். 
டுடே லொள்ளு 
சீன்றவன் எவன்னு தெரிஞ்சது நான் மனுஷனாவே சாரி குரங்காவே இருக்க மாட்டேன்.


நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

Labels:

11/13/2010

ஜிமெயில் லேபில்(Lab) தவிர்க்க கூடாத 5 வசதிகள்

கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையை தரும் ஜிமெயிலில் பல எண்ணற்ற வசதிகள் நிரந்து உள்ளன. ஜிமெயிலில் Lab என்ற பகுதியில் இந்த வசதிகள் இருக்கின்றன. இதில் உள்ள சில முக்கியமான மிகவும் பயனுள்ள வசதிகளை பற்றி இங்கு காண்போம்.

1) OFFLINE:
இந்த வசதி மிகவும் பயனுள்ள வசதி. நம் கணினியில் இணைய இணைப்பு இல்லாத போதும் நமக்கு வந்து இருக்கும் புதிய மெயில்களை இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம் பெற்று கொள்ளலாம்.
SETTINGS- OFFLINE - க்ளிக் செய்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஆனால் ஜிமெயிலில் MULTIPLE SIGNIN ஆக்டிவேட் செய்து இருந்தால் இவ்வசதியை பெற முடியாது. https://www.google.com/accounts/b/0/MultipleSessions இந்த லிங்கில் சென்று MULTIPLE SIGN IN வசதியை செயலியக்க செய்துவிட்டு இதனை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

2. PICTURE IN CHAT
நாம் ஜிமெயில் நம் நண்பர்களுடன் இலவசமாக அரட்டை அடித்து கொள்வோம். அப்படி அரட்டையில் இருக்கும் போது நாம் ஏதேனும் செய்தி அனுப்பினால் நம்முடைய படம் தெரிவதற்கு இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விடுங்கள். இதற்க்கு SETTINGS- LABS- PICTURE IN CHAT - ENABLE -SAVE CHANGES.
3. UNDO SEND
நாம் அவசர அவசரமாக ஏதேனும் தவறான மெயிலோ அல்லது முகவரி மாற்றியோ மெயில் அனுப்பிவிட்டால் அதை போகாமல் தடுக்க இந்த வசதி பயன் படுகிறது. இதற்க்கு SETTINGS- LABS - UNDO SEND - ENABLE - SAVE CHANGES- க்ளிக் செய்து இதை ஆக்டிவேட் செய்தவுடன் மறுபடியும் GENERAL க்ளிக் செய்து உங்களின் நேர அனுப்பிய மெயிலை தடுக்கும் நேர இடைவெளியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

4. RIGHT CHAT
நம்முடைய ஜிமெயிலில் உள்ள சட பகுதியை இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு கொண்டு வர இந்த வசதியை செயல் படுத்தி கொள்ளுங்கள். இதற்க்கு SETTINGS - LABS - RIGHT-SIDE CHAT - ENABLE - SAVE CHANGES. 

5. SIGNATURE


ஜிமெயிலில் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலின் கீழே நீங்கள் உங்களுடைய பெயரை டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த வசதியை  செயல் படுத்தி விட்டாலே போதும் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலின் கீழே உங்களுடைய பெயர் வந்து விடும். 
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

Labels:

சுலபமாக வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய

இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கிறது. இதில் பிரபலமான தளங்கள் youtube, Daily motion, Metacafe போன்ற தளங்கள் ஆகும். இந்த வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது என்று நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று இங்கு காணலாம். இதற்கு ஒரு இணைய தளம் உள்ளது இதில் நம் கணினியில் சேமிக்க பட்டிருக்கும் வீடியோவில் இருந்து கூட ஆடியோவை பிரித்தெடுத்து கொள்ளலாம்.
Read more »

Labels:

11/12/2010

யு டொரன்ட் புதிய பதிப்பு - U Torrent2.2.23071

நாம் இணையத்தில் இருந்து படங்களையோ அல்லது மென்பொருட்களையோ தரவிறக்க பெரும்பாலானவர்களால் உபயோகிக்கபடுவது இந்த U Torrent மென்பொருளாகும். இந்த மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இப்பொழுது வெளியிட்டு உள்ளனர். தற்போது நாம் அனைவராலும் உபயோகபடுத்தபடும் பதிப்பு U Torrent2.0.4.22450 இதை அப்டேட் செய்து புதிய பதிப்பான U Torrent2.2.23071 பதிப்பை நம் கணினியில் நிறுவி கொள்ளலாம்.
Read more »

Labels:

11/10/2010

கூகுள் தேடலில் மேலும் ஒரு பயனுள்ள வசதி- Webpage Previews

இணையத்தில் யாராலும் அசைக்க முடியாத ஜாம்பவனாக இருக்கும் கூகுள் புதியதாக வெளியிட்ட கூகுள் இன்ஸ்டன்ட் வசதி அனைவரின் செல்வாக்கை பெற்று அனைவரும் உபயோகித்து கொண்டிருக்கும் வசதி. தற்போது நம் தேடுதலை சுலபமாக்க கூகுளின் தேடலில் உள்ள முடிவுகளில் உள்ளே இருக்கும் இணைய பக்கத்தின் மாதிரியை நாம் கூகுளிலே பார்த்து கொள்ளலாம். இந்த வசதியினால் நாம் தேடுவது உள்ளே இருக்கிறதா இல்லையா என கூகுளிலேயே பார்த்து கொள்ளலாம்.
Read more »

Labels:

11/09/2010

உங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற

இணையத்தில் நம் சொந்த கருத்துக்களை பகிர இந்த பிளாக்ஸ்பாட் தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. வலைப்பதிவு என்பது என்ன என்று கூட தெரியாமல்  பதிவர்களில் பெரும்பாலானோர்(என்னையும் சேர்த்து) விளையாட்டாக வலைப்பதிவு தொடங்கி பதிவு போடுகிறோம். இப்படி விளையாட்டாக பதிவு போட ஆரம்பித்து நாளடைவில் நாம் விளையாட்டாகா தொடங்கிய வலைப்பதிவு பிரபலமானவுடன் நமக்கென்று ஒரு சொந்த டொமைன் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றும். 

ஆனால் இப்படி தொடங்கினால் இந்த இப்பொழுது வரும் வாசகர்களை இழந்து விடுவோமோ அல்லது புது டொமைன் வாங்கினால் நாம் தளத்தில் உள்ள அனைத்து விட்ஜெட்டுக்களையும் திரும்பவும் இணைக்கவேண்டுமா என்ற அச்சத்தின் பேரிலேயே பெரும்பாலானோர் டொமைன் வாங்குவதை தவிர்க்கின்றனர். கவைலையை விடுங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்றுவது எவ்வாறு என்று கூறுகின்றேன். இதை செய்ய நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை நம் பிளாக்கிலேயே செய்து முடித்து விடலாம். (ஆனால் ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் இப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு இருக்கும் அலெக்சா ரேங்க் புதிய டொமைன் வாங்கினால் இருக்காது)
 • Dassboard - Settings - Publishing -பகுதிக்கு செல்லுங்கள்.
 • சென்று அங்கு உள்ள Custom Domain என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.வரும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய டொமைன் பெயரை சரியாக கொடுக்கவும்.

 • பெயரை கொடுத்து Check Availability என்பதை க்ளிக் செய்யவும். நீங்கள் கொடுத்த URL காலியாக இருந்தால் yourdomain.com is available என்ற செய்தி வரும் இல்லையேல் உங்களுக்கு கொடுத்த பெயருக்கு சார்ந்து உள்ள URL கொடுக்கும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
 • அடுத்து வரும் விண்டோவில் Continue to registration என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் உங்களின் தகவல்களை சரியாக பொருத்தி accept கொடுக்கவும்.
 • அடுத்து payment செய்யும் விண்டோ வரும் இதில் உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டின் எண்ணை சரியாக கொடுத்து உங்களுடைய domain உருவாக்கி கொள்ளுங்கள்.
 • கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும். 

அவ்வளவு தான் இனி உங்களுடைய பிளாக்ஸ்பாட் URL கொடுத்தால் நேரடியாக உங்கள் புதிய டொமைன் url தளம் ஓபன் ஆகும். ஆகையால் உங்கள் வாசகர்களுக்கும் எந்த கடினமும் இருக்காது.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

டுடே லொள்ளு 
Photobucket
அய்யோ என் கொம்பு இந்த நெருப்ப நான் சும்மா விட மாட்டேன்.

Labels: